/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பராமரிப்பில்லாத அம்பேத்கர் பூங்கா பராமரிப்பில்லாத அம்பேத்கர் நினைவு பூங்கா

ADDED : ஏப் 11, 2024 12:22 AM
ஊட்டி, : ஊட்டியில் உள்ள அம்பேத்கர் நினைவு பூங்கா பராமரிபில்லாமல் புதர் சூழ்ந்துள்ளது.
ஊட்டி மத்திய பஸ்ஸ்டாண்ட் எதிரே நகராட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் நினைவு பூங்கா உள்ளது. இங்கு, சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சமீபகாலமாக, இந்த பூங்காவை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். ஊட்டி நகரில் முக்கிய பகுதியில் உள்ள இந்த பூங்கா புதர் சூழ்ந்து காணப்படும் அவலநிலை குறித்து, சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவித்து செல்கின்றனர்.
இது குறித்து உள்ளூர் மக்கள் நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கோடை சீசனை முன்னிட்டு, நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.