/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பயன்படுத்த முடியாத கழிப்பிடம் 'டான்டீ' தொழிலாளர்கள் அதிருப்தி
/
பயன்படுத்த முடியாத கழிப்பிடம் 'டான்டீ' தொழிலாளர்கள் அதிருப்தி
பயன்படுத்த முடியாத கழிப்பிடம் 'டான்டீ' தொழிலாளர்கள் அதிருப்தி
பயன்படுத்த முடியாத கழிப்பிடம் 'டான்டீ' தொழிலாளர்கள் அதிருப்தி
ADDED : பிப் 25, 2025 09:57 PM
கூடலுார், ; கூடலுார் பாண்டியார் டான்டீ குடியிருப்பு பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிப்பிடங்களால் தொழிலாளர்கள்அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார் பகுதியில், அரசு தேயிலை தொட்ட கழகமான 'டான்டீ'க்கு சொந்தமாக பாண்டியார், நெல்லியாளம், சேரங்கோடு, சேரம்பாடி தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள், டான்டீயில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். குடியிருப்புக்கு தேவையான மின்சார வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், பல வீடுகள் பராமரிப்பு இன்றியும், சரியான குடிநீர், நடைபாதை, சாலை வசதியின்றியும் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில், சேதமடைந்த கழிப்பிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், தொழிலாளர்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.
கூடலுார், கோழிக்கோடு சாலை இரும்புபாலம் அருகே, பாண்டியார் -புன்னம்புழா ஆற்றை ஒட்டி பாண்டியார் டான்டீ பகுதியில், தலா 5 வீடுகள் கொண்ட மூன்று லைன்ஸ் வீடுகள் உள்ளது. வீடுகள் அருகே தனியாக கழிப்பிடங்கள் அமைத்துள்ளனர். தற்போது அவைகள் சேதமடைந்து பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், தொழிலாளர்கள் திறந்தவெளிகளை கழிப்பிடமாக பயன்படுத்தும் சூழல் உள்ளது.
தொழிலாளர்கள் கூறுகையில்,'தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த கழிப்பிடங்கள், கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, இதற்கு மாற்றாக புதிய கழிப்பிடங்கள் கட்டி தர அரசு முன்வர வேண்டும்,' என்றனர்.

