/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒற்றுமைக்கு எடுத்து காட்டாக மாறிய உப்பட்டி பள்ளி வாசல் திறப்பு விழா

ADDED : பிப் 25, 2025 10:06 PM

பந்தலுார், ; பந்தலுார் அருகே உப்பட்டி பகுதியில், ஜூம்மா மசூதி கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்க, அப்பகுதியில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் கோவில் கமிட்டியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, நேற்று காலை செந்துார் முருகன் கோவில் கமிட்டி சார்பில் தர்மகர்தா மூர்த்தி, தலைவர் செந்தில்வேல் தலைமையில், பழங்கள், இனிப்பு, அரிசி, காய்கறி, வாழை இலை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.
பள்ளிவாசலுக்கு சென்ற கோவில் கமிட்டியினர் மற்றும் மக்களை, பள்ளிவாசல் தலைவர் மஜீத் ஹாஜி, செயலாளர் ஐமுட்டி, அசப்ஜான் மற்றும் நிர்வாகிகள் கட்டித்தழுவி வரவேற்றனர்.
தொடர்ந்து, சீர்வரிசை பொருட்கள் பள்ளிவாசல் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அனைவரும் பள்ளிவாசலுக்குள் அழைத்து செல்லப்பட்டனர்.
பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகிகள் கூறுகையில், 'இந்த பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் ஒரே உறவாக வாழ்ந்து வருவதை இந்த நிகழ்வு வெளிக்காட்டி உள்ளது. இதனை எடுத்துக்காட்டாக கொண்டு மாவட்டத்தின் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்,' என்றனர்.