/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டங்களை பராமரிக்கும் விவசாயிகள் உரத்தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தல்
/
தேயிலை தோட்டங்களை பராமரிக்கும் விவசாயிகள் உரத்தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தல்
தேயிலை தோட்டங்களை பராமரிக்கும் விவசாயிகள் உரத்தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தல்
தேயிலை தோட்டங்களை பராமரிக்கும் விவசாயிகள் உரத்தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தல்
ADDED : ஆக 09, 2024 01:49 AM

ஊட்டி;'நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் ஏற்பட்டுள்ளதால், தேவைக்கேற்ப தட்டுப்பாடின்றி உரம் வழங்க வேண்டும்,' என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, 100க்கு மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் செயல்படுகிறது.
கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், 30 ஆயிரம் பேர் அங்கத்தினர்களாக இருந்து கொண்டு, தங்களது தோட்டத்தில் அறுவடை செய்யும் இலை களை அந்தந்த தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர்.
தற்போது, நாள்தோறும், 15 ஆயிரம் கிலோ முதல், 20 ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறது. கூட்டுறவு தொழிற்சாலைகளில் விற்பனையை கணக்கிட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது. சராசரியாக கிலோவுக்கு, 15 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு குறிப்பாக தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பெரும்பாலான பகுதிகளில் உரமிட்டு தோட்டங்களை பராமரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக, என்.சி.எம்.எஸ்., நிறுவனம் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உரத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, 'யூரியா பேஸ், பொட்டாசியம்' கலந்த உரத்தை அதிகளவில் பயன்படுத்துவதால், விவசாயிகளின் தேவை அறிந்து தேவைக்கேற்ப உரம் வினியோகித்தால் பெரும் பயன் ஏற்பட வாய்ப்புள்ளது.