/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாற்று இடம் அவசரம்! விடுதி கட்ட இடம் தேர்வு செய்யும் பணியில் குழப்பம்; அரசின் ரூ.8 கோடி நிதி திரும்ப செல்லும் அபாயம்
/
மாற்று இடம் அவசரம்! விடுதி கட்ட இடம் தேர்வு செய்யும் பணியில் குழப்பம்; அரசின் ரூ.8 கோடி நிதி திரும்ப செல்லும் அபாயம்
மாற்று இடம் அவசரம்! விடுதி கட்ட இடம் தேர்வு செய்யும் பணியில் குழப்பம்; அரசின் ரூ.8 கோடி நிதி திரும்ப செல்லும் அபாயம்
மாற்று இடம் அவசரம்! விடுதி கட்ட இடம் தேர்வு செய்யும் பணியில் குழப்பம்; அரசின் ரூ.8 கோடி நிதி திரும்ப செல்லும் அபாயம்
ADDED : செப் 15, 2024 11:32 PM
ஊட்டி : ஊட்டி அரசு கலை கல்லுாரியில் படிக்கும், 450 எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்காக, விடுதி கட்ட 'தாட்கோ' மூலம், 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது; இடத்தை தேர்வு செய்வதில் உள்ள குழப்பம் காரணமாக, நிதி திரும்ப செல்லும் அபாயம் உள்ளது.
ஊட்டி அரசு கலைக்கல்லுாரியில் இளங்கலை மற்றும் முதுகலையில் கலை பிரிவில், 'தமிழ், ஆங்கிலம் வரலாறு, சுற்றுலா பயண மேலாண்மை, பொருளாதாரம், பாதுகாப்பு, அறிவியல் பிரிவில் கணிதம், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன், தாவரவியல், விலங்கியல், வன விலங்கு உயிரியல், கணினி அறிவியல், வர்த்தக பிரிவில் வணிகவியல் துறை, வர்த்தக சி.ஏ., வர்த்தக ஐ.பி' என, மொத்தம், 18 பாட பிரிவுகள் செயல்படுகிறது. நீலகிரி உட்பட பிற மாவட்டத்தை சேர்ந்த, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
விடுதிக்காக ரூ. 8 கோடி ஒதுக்கீடு
இக்கல்லுாரியில், இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவில்,40 சதவீதம் மாணவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் படித்து வருகின்றனர். அதில், இங்குள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக கட்டப்பட்ட விடுதியில் 450 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய மாணவர் விடுதி கட்ட 'தாட்கோ' மூலம், 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தாட்கோ அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு கல்லுாரியை ஒட்டிய இடத்தில் மாணவர் விடுதி கட்ட பூமி பூஜையும் நடத்தினர். இந்நிலையில், 'ஸ்டோன் ஹவுஸ்' என்று அழைக்கப்படும் வரலாற்று பாரம்பரிய கட்டடத்தை ஒட்டி விடுதி கட்டப்படுவதால் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், பூமி பூஜையுடன் பணிகள் நிறுத்தப்பட்டது. பின், தாட்கோ செயற்பொறியாளர் சரஸ்வதி தலைமையில் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரை சந்தித்து பிரச்னைகளை தெரிவித்துள்ளனர்.
நிதி திரும்பும் அபாயம்
புதிதாக கட்டப்படும் மாணவர்கள் விடுதியை, 450 மாணவர்கள் பயன்படுத்த உள்ளதால், புதிய வடிவமைப்புடன் விடுதியை கட்ட தாட்கோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இடம் தொடர்பான குழப்பம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் விரைவாக வேறு பகுதியில் இடம் தேர்வு செய்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில், தாமதப்படுத்தினால் வேறு மாவட்டத்திற்கு நிதி சென்றுவிடும் அபாயம் உள்ளது.
'தாட்கோ' செயற் பொறியாளர் சரஸ்வதி கூறுகையில், ''ஊட்டி அரசு கலைக்கல்லுாரியில் படித்து வரும், 450 எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்கள் பயன்படும் வகையில், மாணவர்கள் விடுதி கட்ட, 8 கோடி ரூபாய் நிதி தாட்கோ மூலம் ஒதுக்கப்பட்டது. இடம் தேர்வில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவித்துள்ளோம். இடம் கிடைத்தால், கட்டட பணிகளை துவக்கி விடலாம். தாமதமானால் ஒதுக்கப்பட்டு நிதி வேறு மாவட்டத்திற்கு சென்று விடும் நிலை உள்ளது. இதனால், அதகிாரிகள் விரைவாக வேறு இடத்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்,''என்றார்.