/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு தடுப்பூசி
/
ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு தடுப்பூசி
ADDED : மே 13, 2024 11:49 PM
ஊட்டி;ஊட்டியில் இருந்து, ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு சுகாதார துறை சார்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஊட்டியில் பெடரேஷன் மதினா பள்ளி வாசலில், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மற்றும் சுன்னத் ஜமாத் பெடரேஷன் மதினா பள்ளி வாசல் நிர்வாகம் இணைந்து, ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கான தடுப்பூசி முகாமை நடத்தின. சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி துவக்கி வைத்தார்.
அதில், 'ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், 35 பெண்கள்; 29 ஆண்கள்,' என, 64 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், பெடரேஷன் மதினா பள்ளி வாசல் தலைவர் சயியுல்லா கான், துணை தலைவர்கள் சலாமுல்லா, அப்துல் காதர்; செயலாளர் அப்துல்ரசீத்; துணை செயலாளர்கள் கவுஸ் மொய்தீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

