/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளா-கர்நாடகா இடையே இயக்கப்படும் வாகனங்கள் கூடலுார் வழியாக செல்லும் போது இ- -பாஸ் விலக்கு வேண்டும்
/
கேரளா-கர்நாடகா இடையே இயக்கப்படும் வாகனங்கள் கூடலுார் வழியாக செல்லும் போது இ- -பாஸ் விலக்கு வேண்டும்
கேரளா-கர்நாடகா இடையே இயக்கப்படும் வாகனங்கள் கூடலுார் வழியாக செல்லும் போது இ- -பாஸ் விலக்கு வேண்டும்
கேரளா-கர்நாடகா இடையே இயக்கப்படும் வாகனங்கள் கூடலுார் வழியாக செல்லும் போது இ- -பாஸ் விலக்கு வேண்டும்
ADDED : மே 12, 2024 11:43 PM

கூடலுார்:கூடலுார் வழியாக, கேரளா-கர்நாடகா இடையே இயக்கப்படும் சுற்றுலா வாகனங்கள் அல்லாத, பிற வாகனங்களுக்கு, இ--பாஸ் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
ஊட்டியில் நிலவும் கோடை சீசனை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி, மாவட்ட நிர்வாகம் சார்பில், நீலகிரிக்குள் வரும் வாகனங்களுக்கு, 7ம் தேதி முதல், ஜூன், 3ம் தேதி வரை, இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது.
நீலகிரி மாவட்ட எல்லை மற்றும் கூடலுாரை ஒட்டிய, தமிழக-கேரளா, தமிழக-கர்நாடகா எல்லைகளில் வருவாய் துறையினர், நீலகிரிக்குள் நுழையும் வாகனங்களில் இ--பாஸ் சோதனைக்கு பின் அனுமதித்து வருகின்றனர்.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ--பாஸ் நடைமுறை வரவேற்றுள்ள, வெளி மாநில வாகன ஓட்டுனர்கள், கூடலுார் வழியாக கேரளா; கர்நாடக இடையே இயக்கப்படும் வாகனங்களுக்கு, இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தியுள்ளனர்.
வெளி மாநில ஓட்டுனர்கள் கூறுகையில், 'நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதி, கேரளா, - கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இவ்வழியாக, இரு மாநிலங்களுக்கு இடையே வியாபாரம் மற்றும் கர்நாடகாவில் படிக்கும் கேரளா மாணவர்கள் இந்த வழி தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இ-பாஸ் நடைமுறையால், கேரளா கர்நாடகாவுக்கு இடையே செல்லும் வாகனங்களுக்கு சிரமங்கள் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம், கூடலுார் வழியாக கேரளா - கர்நாடகா இடையே, இயக்கப்படும் வாகனங்களுக்கு இ--பாஸ் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
மேலும், மாநில எல்லையில் மேற்கொள்ளப்படும் இ--பாஸ் சோதனை முறையை, ஊட்டி தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம், ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் குறித்து விவரங்கள் முழுமையாக தெரியவரும்,' என்றனர்.