/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தண்ணீர் வினியோகம் இல்லை: கிராம மக்கள் அவதி
/
தண்ணீர் வினியோகம் இல்லை: கிராம மக்கள் அவதி
ADDED : ஏப் 04, 2024 11:50 PM

பந்தலுார்;பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாக்கனா பகுதி அமைந்துள்ளது.
இந்த பகுதியில், 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், தாழ்வான பகுதியில் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது.
கிணற்றின் மோட்டார் பழுதடைந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், ஊராட்சி குடிநீர் உதவியாளர் அதனை சீரமைக்க எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கிராமத்தை ஒட்டி தேயிலை தோட்டம் மற்றும் புதர் பகுதிகள் அமைந்துள்ள நிலையில், யானை, புலி மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், தண்ணீர் தேவைக்காக மக்கள் வனவிலங்கு அச்சத்துடன், தாழ்வான பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை தேடி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த பகுதியில் மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யும் விதமாக, பழுதடைந்த குடிநீர் மோட்டாரை சீரமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

