/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேர்தல் விதிமுறை மீறல்; அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
/
தேர்தல் விதிமுறை மீறல்; அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
தேர்தல் விதிமுறை மீறல்; அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
தேர்தல் விதிமுறை மீறல்; அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
ADDED : ஏப் 05, 2024 10:32 PM
ஊட்டி : ஊட்டியில் தேர்தல் விதிமுறை மீறியதாக, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட சிலரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
நீலகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை ஆதரித்து, கட்சி பொதுச் செயலாளர் பழனிசாமி, நேற்று முன்தினம் ஊட்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, கிராமப்புறங்களில் இருந்து, கூட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட பலருக்கு, 300 ரூபாய் வீதம், அ.தி.மு.க., வினர் பணம் பட்டுவாடா செய்துள்ளனர். இதனை 'வீடியோ' பதிவு செய்த சிலர், தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பியுள்ளனர். அதன்படி, தேர்தல் ஆணைய பறக்கும் படை மற்றும் செலவின கண்காணிப்பு குழுவினர் நேற்று ஒன்றிய செயலாளர் பெள்ளி விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர்.