/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விதி மீறலில் ஈடுபடும் நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை
/
விதி மீறலில் ஈடுபடும் நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை
விதி மீறலில் ஈடுபடும் நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை
விதி மீறலில் ஈடுபடும் நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை
ADDED : ஏப் 18, 2024 04:29 AM
ஊட்டி, ; 'நீலகிரி தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வெளி நபர்கள், உடனடியாக வெளியேற வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை, 19 ம் தேதி நடக்கிறது. தேர்தல் கமிஷனால் விதிக்கப்பட்ட விதிமுறைகள், 17 ம் தேதி மாலை, 6:00 மணி முதல் ஓட்டுப்பதிவு முடிவடையும் வரை அமலில் இருக்கும்.
அரசியல் கட்சி பிரமுகர்கள், பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலை, 6:00 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தல் தொடர்பான எந்தவிதமான பொதுகூட்டம், பேரணி நடத்த கூடாது.
நீலகிரி தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வெளி நபர்கள், உடனடியாக வெளியேற வேண்டும். அதில், விதி மீறலில் ஈடுபடும் நபர்களுக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
மேலும், விதிகளை மீறி திருமணம் மண்டபம், சமுதாய கூடங்களில் தங்கியுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாவட்டங்களிலிருந்து நீலகிரி லோக்சபா தொகுதிக்கு வரும் வெளி வாகனங்களை சோதனை சாவடிகளில் கண்காணிக்க வேண்டும்.
தவிர, தனியார் விடுதிகள், தங்குமிடங்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,' என்றனர்.

