/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் வாகனம் மோதி சேதமடைந்த வாட்டர் ஏ.டி.எம்., இடத்தை மாற்றினால் பயன்
/
கூடலுாரில் வாகனம் மோதி சேதமடைந்த வாட்டர் ஏ.டி.எம்., இடத்தை மாற்றினால் பயன்
கூடலுாரில் வாகனம் மோதி சேதமடைந்த வாட்டர் ஏ.டி.எம்., இடத்தை மாற்றினால் பயன்
கூடலுாரில் வாகனம் மோதி சேதமடைந்த வாட்டர் ஏ.டி.எம்., இடத்தை மாற்றினால் பயன்
ADDED : ஆக 19, 2024 01:48 AM

கூடலுார்:கூடலுார் நகராட்சி அலுவலகம் அருகே, வாகனம் மோதி சேதமடைந்த, வாட்டர் ஏ.டி.எம்., பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை உள்ளது. இதற்கு மாற்றாக மாவட்டத்தின் முக்கிய இடங்களில் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்காக, வாட்டர் ஏ.டி.எம்.,கள் அமைத்துள்ளனர்.
இவற்றை சரியாக பராமரிக்காததால், பல இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்.,களில் இருந்து தண்ணீர் வருவதில்லை; பழுதடைந்த வாட்டர் ஏ.டி.எம்.,களை சீரமைப்பதில்லை.
இந்நிலையில், கூடலுார் நகராட்சி அலுவலகம் அருகே, தடுப்பு சுவரை ஒட்டி, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள, வாட்டர் ஏ.டி.எம்., வாகனம் மோதி சேதமடைந்தது. அதனை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' இங்குள்ள வளைவான அப்பகுதியில், விபத்து ஏற்படும் என்பதால், வாட்டர் ஏ.டி.எம்., அமைப்பதை துவக்கத்தில் பலரும் எதிர்த்தனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில், வாட்டர் ஏ.டி.எம்., அமைத்தது.
இந்நிலையில், சமீபத்தில் வாகனம் மோதி சேதமடைந்தது; இதுவரை சீரமைக்க வில்லை. தொடர்ந்து, அதே இடத்தில், வாட்டர் ஏ.டி.எம்., செயல்பட்டால் மீண்டும் விபத்துகள் ஏற்பட ஆபத்து உள்ளது. எனவே, அதனை சீரமைத்து, பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும்,' என்றனர்.

