துார் வாரப்படாத ஓடையால் தண்ணீர் சேமிப்பதில் சிக்கல்
துார் வாரப்படாத ஓடையால் தண்ணீர் சேமிப்பதில் சிக்கல்
ADDED : ஜூலை 22, 2026 06:33 PM
கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் பெரும்பாலான ஓடைகளை துார் வாராததால், மழை நாட்களில் தண்ணீர் சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி வட்டாரத்தில் நீர் பிடிப்பு பகுதிகளுக்கு, சிற்றோடைகள் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளன. குறிப்பாக, குருவேனு ஹள்ளா நீர்ப்பிடிப்பு பகுதிக்கு, பனஹட்டி மற்றும் குடிமனை சிற்றோடைகள் முக்கியமானவையாக உள்ளன.
இந்த ஓடைகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, சரிவர துார் வாரப்படாமல் உள்ளன. இதனால், ஓடையில் பொருட்கள் மற்றும் செடிகள் முளைத்து, ஆழமும், அகலமும் வெகுவாக குறைந்துள்ளன.
தற்போது, மழை இல்லாததால் ஓடையில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், பயிர்களுக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல், தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மேலும், மழை நாட்களில் மழை நீரை முழுமையாக சேமிக்க முடிவதில்லை. கனமழையின் போது. தண்ணீர் தரை தட்டுவதால், விவசாய நிலங்களில் மண்ணரிப்பு அபாயமும் உள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி, ஓடைகளை துார்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
