ADDED : ஜூலை 22, 2026 06:33 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ‘ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின், கைரேகையை பதிவு செய்ய வேண்டும்,’ என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும், ஏ.ஏ.ஒய்., மற்றும் பி.எச்.எச்., ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் ரேஷன் கார்டுகளில், குடும்ப உறுப்பினர்களின் கைரேகையை, ரேஷன் கடையில் உள்ள, பி.ஓ.எஸ்., இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். வேலை நாட்களில், தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பிற மாவட்டங்களில் வேலை நிமித்தமாக தங்கி உள்ளவர்கள், அந்த பகுதிகளின் அருகில் உள்ள ரேஷன் கடையில், ரேஷன் அட்டை நகலுடன் சென்று, கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
