/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் நீர் நிலைகளில் குறையும் தண்ணீர் வரத்து; வனவிலங்குகள் குடியிருப்பு நோக்கி வரும் ஆபத்து

ADDED : பிப் 23, 2025 11:30 PM

கூடலுார்; கூடலுாரில் உற்பத்தியாகும், நீர்நிலைகளில் நீர் வரத்து குறைந்து வருவதால், வனவிலங்குகள் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கூடலுார் வனக்கோட்டம் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. கோடையில், இவைகளில் குடிநீர் தேவையை இங்கு உற்பத்தியாகும் பாண்டியாறு -புன்னம்புழா, பொன்னானி, புளியாம்பாறை, ஓவேலி பார்வுட், சூண்டி சுண்ணாம்பு பாலம் ஆறுகள் பூர்த்தி செய்து வருகிறது. தற்போது, வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஆறுகளில் நீர் வரத்து குறைந்து வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால், வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும். வனவிலங்குகள் குடிநீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் அபாயம் உள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'கோடையில் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க, வறட்சி அதிகம் உள்ள பகுதிகளில், சிமென்ட் தொட்டிகள் அமைத்து, வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று நிரப்பி வனவிலங்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்,' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'தற்போதைக்கு, வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. கோடை மழை தொடர்ந்து ஏமாற்றினால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. அப்போது, அவைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், குடியிருப்பு நோக்கி வருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.