ADDED : ஜூன் 11, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்;கூடலுார், ஸ்ரீமதுரை ஊராட்சி, குங்கூர்மூலா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நேற்று, திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ராஜம்மா மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
ஸ்ரீ மதுரை ஊராட்சி தலைவர் சுனில், முன்னாள் தலைமை ஆசிரியர் ஜமால் முகமது குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், பி.டி.ஏ., தலைவர் ரதிஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மினிமோள், நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.