/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை; தொழிலாளர்களுக்கு அழைப்பு
/
நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை; தொழிலாளர்களுக்கு அழைப்பு
நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை; தொழிலாளர்களுக்கு அழைப்பு
நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை; தொழிலாளர்களுக்கு அழைப்பு
ADDED : மார் 14, 2025 10:27 PM
ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை நடப்பதால் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (பொ) லெனின், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாநிலத்தில் உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு, சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டு, 19 தொழிலாளர் நல வாரியம் செயல்படுகிறது.
அதில், வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் இணையம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை அதிகளவு பதிவு செய்யும் வகையில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் வாரந்தோறும், புதன்கிழமை காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை முகாம் நடைபெறுகிறது. புதன் கிழமை அரசு விடுமுறையாக இருக்கும் பட்சத்தில், அதற்கு அடுத்த அரசு வேலை நாட்களில் முகம் நடக்கிறது. மேற்குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள், வயதிற்கான ஆவணம், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி புத்தகம், தேர்தலுக்கான ஏதேனும் ஒரு அசல் ஆவணங்களுடன் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.