/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டு எண்ணும் மையத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
ADDED : மே 19, 2024 11:20 PM
ஊட்டி;ஊட்டி அரசு பாலிடெக்னிக் ஓட்டு எண்ணும் மையத்தை, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு செய்தார்.
நீலகிரி லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு கடந்த, ஏப்., 19ம் தேதி முடிந்தது. ஜூன், 4ம் தேதி ஓட்டு எண்ணப்படுகிறது. 6 தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்ட 'ஸ்ட்ராங்' ரூமில் வைக்கப்பட்டு ' சீல்' வைக்கப்பட்டது. 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கல்லுாரியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையத்தை ஆய்வு செய்தார். அதில், 'ஸ்ட்ராங் ரூம், கண்காணிப்பு கேமராக்கள்' முறையாக செயல்படுகிறதா,' என, பார்வையிட்டார். எஸ்.பி., சுந்தரவடிவேல் உடனிருந்தார்.

