/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அறங்காவலர் எப்ப தான் நியமிப்பாங்க? பத்து ஆண்டுகளாக பக்தர்கள் காத்திருப்பு
/
அறங்காவலர் எப்ப தான் நியமிப்பாங்க? பத்து ஆண்டுகளாக பக்தர்கள் காத்திருப்பு
அறங்காவலர் எப்ப தான் நியமிப்பாங்க? பத்து ஆண்டுகளாக பக்தர்கள் காத்திருப்பு
அறங்காவலர் எப்ப தான் நியமிப்பாங்க? பத்து ஆண்டுகளாக பக்தர்கள் காத்திருப்பு
ADDED : ஜூலை 05, 2024 01:52 AM
அன்னுார்:குமரன்குன்று கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்களா என பத்து ஆண்டுகளாக பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில், மருதமலைக்கு அடுத்து பிரசித்தி பெற்றது குமரன் குன்று. குன்றின் மீது கல்யாண கோலத்தில் முருகப் பெருமான் வீற்றிருக்கும் கோவில் குமரன் குன்று. அன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள குமரன் குன்று கல்யாணசுப்பிரமணியசாமி கோவில் நூறாண்டுகளுக்கு மேல் பழமையானது. இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கிருத்திகை, வைகாசி விசாகம் ஆகிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். அன்னுார், மேட்டுப்பாளையம், ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
இக்கோவிலில் ராஜகோபுரம், முன் மண்டபம், சுற்று பிரகாரம், மேற்கூரை, வாகனங்கள் நிறுத்தும் இடம் என பல்வேறு திருப்பணிகள் செய்ய பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர். எனினும் அறங்காவலர்கள் நியமிக்கப்படாததால் இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: குமரன் குன்று கோவிலில் ஏற்கனவே இருந்த அறங்காவலர்களின் பதவிக்காலம் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அ.தி.மு.க., ஆட்சியிலும் ஏழு ஆண்டுகள் அறங்காவலர் நியமிக்கவில்லை.
தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அருகில் உள்ள காரமடை ரங்கநாதர் கோவில், இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவில், அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு திருப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
ஆனால் குமரன் குன்று கோவிலில் ஆளுங் கட்சியினர் இடையே அறங்காவலர் பதவியை பிடிப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக முடிவு செய்ய முடியாமல் அறநிலையத் துறை அதிகாரிகள் நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளனர். உடனடியாக அறங்காவலர்களை நியமித்து திருப்பணி விரைவில் துவக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பக்தர்கள் தெரிவித்தனர்.