ADDED : ஆக 05, 2026 02:10 PM

அ நிறம் | அளவு
மஞ்சூர்: மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமை நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக தேயிலை, மலை காய்கறி தோட்டம் மற்றும் குடியிருப்புகளில் காட்டெருமை நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுடன், தோட்ட தொழிலாளர்கள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.
மஞ்சூர் அருகே மெரிலேண்ட் தேயிலை தோட்டத்தில் ஒரே இடத்தில், 20 க்கு மேற்பட்ட காட்டெருமைகள் சுற்றி திரிவதுடன் தொழிலாளர்கள் , அச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்.
