தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பழநிக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள்

 பழநிக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள்

 பழநிக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள்


ADDED : ஆக 05, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 06:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தை சேர்ந்த, 40 முருக பக்தர்கள், பழநி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி முருகப்பெருமானை தரிசிக்க, பாதயாத்திரை சென்றனர்.

கடந்த, 40 ஆண்டுகளாக பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், கிராமத்தில் உள்ள விநாயகர் மற்றும் ஹெத்தையம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர்.

கிராம மக்கள் பக்தர்களை வழியனுப்பி வைத்தனர். அன்னுார், ஐயன் கோவில், பல்லடம், தாராபுரம் பகுதிகளில் உள்ள மண்டபங்களில், இரவு நேரங்களில் ஓய்வெடுத்து, அதிகாலையில் இருந்து, மாலை வரை யாத்திரை செல்லும் பக்தர்கள், வரும், 7ம் தேதி (வெள்ளிக்கிழமை) பழநி அடிவாரத்தை அடைகின்றனர்.

அங்கு நடைபெறும் பஜனை மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியில் பங்கேற்று, மாலை, 4:00 மணிக்கு கோவிலை கிரிவலம் சுற்றி, மலையேறும் பக்தர்கள், முருக பெருமானை தரிசித்து, இரவு தங்கத் தேர் சிறப்பு பூஜையில் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us