/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஹவுசிங் போர்டு அருகே காட்டு யானைகள் உலா
/
ஹவுசிங் போர்டு அருகே காட்டு யானைகள் உலா
ADDED : ஆக 02, 2024 05:34 AM
கூடலுார் : கூடலுார் ஹவுசிங் போர்டு பகுதியில் காலையில் காட்டு யானைகள் கடந்து சென்ற நிகழ்வால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார் தொரப்பள்ளி, அல்லுார்வயல், புத்துார்வயல், மார்க்கமூலா, மார்த்தோமா நகர் பகுதிகளில் இரவில் காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்துகிறது. வனத்துறையினர், யானைகளை முதுமலை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று, காலை, 6:30 மணிக்கு மார்த்தோமா நகர் ஹவுசிங் போர்டு அருகே, குடியிருப்பு தேயிலை தோட்டம் வழியாக மூன்று ஆண் காட்டு யானைகள் கடந்து சென்றது. மக்கள் சப்தமிட்டு அதனை விரட்டினர். சம்பவத்தால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.