/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலையில் வனவிலங்கு கணக்கெடுப்பு; 185 வன ஊழியர்கள் பங்கேற்பு
/
முதுமலையில் வனவிலங்கு கணக்கெடுப்பு; 185 வன ஊழியர்கள் பங்கேற்பு
முதுமலையில் வனவிலங்கு கணக்கெடுப்பு; 185 வன ஊழியர்கள் பங்கேற்பு
முதுமலையில் வனவிலங்கு கணக்கெடுப்பு; 185 வன ஊழியர்கள் பங்கேற்பு
ADDED : மே 01, 2024 10:54 PM

கூடலுார் : முதுமலையில் துவங்கிய பருவமழைக்கும் முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில், 185 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதுமை புலிகள் காப்பகத்தில், ஆண்டுதோறும் பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு முதுமலை உள்வட்ட வனச்சரகங்கள், தெப்பக்காடு, முதுமலை, கார்குடி, நெலாக்கோட்டை, மசினகுடி பகுதிகளில் பருவமழைக்கும் முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கியது.
இதற்காக வனப்பகுதி, 37 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, வனச்சரகர்கள் மனோஜ் குமார், விஜய், கணேஷ், பாரத், பாலாஜி தலைமையில், பிரிவுக்கு தலா, 5 பேர் வீதம், 185 வன ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், வனவிலங்குகளின் விபரம், புழுக்கள், பாறு கழுகுகள் குறித்த விபரங்களை மொபைல் செயலி, 'டேட்டா' சீட்களில் பதிவு செய்து வருகின்றனர். இப்பணி ஏழாம் தேதி நிறைவு பெறுகிறது,
வனத்துறையினர் கூறுகையில், 'வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகளின் போது, பதிவு செய்யப்படும் விபரங்களை, ஆய்வு செய்து வனவிலங்குகள் எண்ணிக்கை குறித்து கணக்கிடப்படும். கணக்கெடுப்பு பணி நடந்தாலும், சுற்றுலா பயணிகள் வழக்கம் போல அனுமதிக்கப்படுவர்,' என்றனர்.

