/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டு பெட்டி வைக்கும் மையத்தில் பணிகள் 'விறு விறு' :பலமாக தயாராகிறது 'ஸ்ட்ராங் ரூம்'

ADDED : ஏப் 08, 2024 10:17 PM
ஊட்டி:லோக்சபா தேர்தல் ஓட்டு பெட்டிகள் வைக்கும் அரசு பாலிடெக்னிக் மையத்தில் தடுப்புகள் அமைத்தல், சிசிடிவி., கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி லோக்சபா தொகுதி ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் உள்ளிட்ட, 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இம்மாதம், 19 ம் தேதி ஓட்டு பதிவு முடிந்தவுடன், அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட ஓட்டு மையங்களிலிருந்து கொண்டு வரப்படும் ஓட்டு பெட்டிகள் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு கொண்டு வந்து பாதுகாப்புடன் வைக்கப்படுகிறது.
இதற்காக இந்த மையத்தை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட 'நோடல்' அதிகாரி தலைமையில் நகராட்சி, பொதுபணித்துறை ஒருங்கிணைப்புடன் பணிகள் நடந்து வருகிறது.
ஜூன், 4 ம் தேதி ஓட்டு எண்ணப்படுவதால், ஓட்டு எண்ணும் மையத்தில், 'ஸ்ட்ராங் ரூம்' கம்ப்யூட்டர்கள், இணையவசதி, உள்ளிட்டவற்றுடன் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பொறுப்பு இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'ஓட்டு எண்ணும் மையத்தில் சிசிடிவி., கேமராக்கள், விளக்குகள் பொருத்துவது 'ஸ்ட்ராங் ரூம்' எலக்ட்ரீக்கல் வசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பணிகள் விரைந்து முடிக்கப்படும்,' என்றனர்.