/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இளையோர் சமுதாய நலனில் அக்கறை செலுத்த வேண்டும்
/
இளையோர் சமுதாய நலனில் அக்கறை செலுத்த வேண்டும்
ADDED : ஆக 20, 2024 10:06 PM

பந்தலுார் : 'பழங்குடியின இளைஞர்கள் சமூக நலனில் அக்கறை செலுத்த வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.
பந்தலுார் அருகே, கையுன்னி பி.ஆர்.எப்., மையத்தில், நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம், 'சைல்டு பண்ட் இன்டர்நேஷனல்' திட்டத்தின் மூலம் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் விஜயா தலைமை வகித்து பேசியதாவது:
பழங்குடியின இளையோர் கல்வி மற்றும் பொது சேவையில் நாட்டம் செலுத்துவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலை மாறினால் மட்டுமே பழங்குடியின சமுதாயம் அனைத்து வகையிலும் மேம்பட முடியும். இதற்காக பழங்குடியின இளையோரை ஒன்றிணைத்து ஒவ்வொரு பழங்குடியின கிராமங்களிலும் குழுக்கள் ஏற்படுத்தப்படும். அந்த குழு நேரு யுவகேந்திராவுடன் இணைத்து தொடர் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கு முன்பாக பழங்குடியின இளைஞர்கள் மற்றும் மகளிர் தங்கள் தலைமை பண்பை வளர்த்துக் கொண்டு, குழந்தை திருமணங்களை தடுப்பது, பழங்குடியினருக்கு அரசு வழங்கும் திட்டங்களை முறையாக பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பழங்குடியினர் இளையோர்களுக்கு ஒரு நாள் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்வா லிவிங்ஸ்டன், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் சங்கீதா உட்பட பலர் பயிற்சி அளித்தனர்.

