/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
10 கிலோ தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் பறிமுதல்
/
10 கிலோ தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் பறிமுதல்
10 கிலோ தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் பறிமுதல்
10 கிலோ தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் பறிமுதல்
ADDED : பிப் 06, 2025 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: ஊட்டி மதுவிலக்கு எஸ்.ஐ.,க்கள் செந்தில், ராஜேஷ் ஆகியோர் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.பின், நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர் வைரம், துப்புரவு மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் வைரம் கூறுகையில்,''பிங்கர்போஸ்ட் சாலையில் உள்ள 'சாக்லேட் வேல்டு' என்ற கடையில், 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது,'' என்றார்.