ADDED : நவ 25, 2026 06:50 PM
குன்னுார்: குன்னுார் இந்து முன்னணி சார்பில் நடந்த, 12 ஜோதிர் லிங்க தரிசன விழாவில் பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.
குன்னுார் மவுன்ட்ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் மண்டபத்தில் இன்று (நவ.,25) ஜோதிர் லிங்க தரிசன விழா நடந்தது. அதில், ‘சோமநாத், மல்லிகார்ஜுன, மகாகாலேஷ்வர், ஓம்காரேஷ்வர், கேதார்நாத், பீமாஷங்கர், விஷ்வநாத், திரயம்பகேஷ்வர், வைத்யநாத், நாகேஷ்வர், ராமேஷ்வர்,’ உள்ளிட்ட, 12 ஜோதிர் லிங்கங்களை பக்தர்கள் ஒரே இடத்தில் தரிசனம் செய்து, அபிஷேகம், தீபாராதனை செய்து வழிபட்டனர்.
கோவை வடமதுரை ராமகிருஷ்ண சேவாஸ்ரமம் ஸ்ரீமத் சுவாமி ஆகாஷானந்த ஜி மகராஜ், நீலகிரி ஓரநள்ளி தங்காடு கன்னேரி ஸ்ரீ சக்தி பீடம் சுவாமி ஸ்ரீ முக்தானந்த சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று ஆன்மிக சொற்பொழிவாற்றினர். விழாவில், குன்னுார், இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுசாமி, மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், ஹரிகரன், நகர தலைவர் சுரேஷ், வீராங்கன், உட்பட பலர் பங்கேற்றனர்.
