ADDED : நவ 25, 2026 06:50 PM

அ நிறம் | அளவு
ஊட்டி: ‘ஊட்டி தாவரவியல் பூங்காவின் பிரதான புல்தரையில் அரங்கு அமைக்கும் பணிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்,’ என,வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பிரதான புல்தரையில் நாள்தோறும் சுற்றுலா பயணியர் இதமான காலநிலையை ரசித்தவாறு ஆடி, பாடி மகிழ்கின்றனர். இந்த பிரதான புல்தரை மைதானத்தில், நேற்று முதல் உணவு திருவிழாவுக்காக அரங்கம் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
தாவரவியல் பூங்காவை பொறுத்தவரை எந்த முக்கிய நிகழ்ச்சிகளானாலும் பிரதான புல்தரை மைதானத்தின் எதிரே உள்ள, பகுதியில் அரங்குகள் அமைப்பது வழக்கம். அப்பகுதியில் உணவு திருவிழா அரங்குகளை அமைக்க மாவட்ட நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
