/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் 148 நிலவாழ் பறவை இனங்கள்: வனத்துறை தகவல்
/
கூடலுாரில் 148 நிலவாழ் பறவை இனங்கள்: வனத்துறை தகவல்
கூடலுாரில் 148 நிலவாழ் பறவை இனங்கள்: வனத்துறை தகவல்
கூடலுாரில் 148 நிலவாழ் பறவை இனங்கள்: வனத்துறை தகவல்
ADDED : மார் 21, 2025 10:00 PM

கூடலுார்; கூடலுார் வன கோட்டத்தில், 14 வகையான நீர் வாழ் பறவைகள், 148 வகையான நில வாழ் பறவைகள் இனங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கூடலுார் வன கோட்டத்தில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில், 9ம் தேதி 20 நீர் நிலை பகுதிகளில், நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி; 16ம் தேதி 23 இடங்களில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. அதில், வன ஊழியர்கள்; தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
இப்பணியில் பல்வேறு வகையான பறவையினங்கள் இருப்பதை பதிவு செய்துள்ளனர். இதன்படி, பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''கூடலுாரில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியின் போது, வேதிவால் குருவி, மரங்கொத்தி, மயில், மாடப்புறா, செம்புத்து, ஊதா தேன் சிட்டு, கொண்டை வளர்த்தான், உண்ணி கொக்கு, வெண் மார்பு மீன் கொத்தி, சாம்பல் இருவாச்சி உள்ளிட்ட பல வகையான பறவைகள் காண முடிந்தது.
இந்த கணக்கெடுப்பில், 14 வகையான நீர்வாழ் பறவை இனங்களில், 135 எண்ணிக்கையிலும்; 148 நிலவாழ் பறவை இனங்களில், 3,023 எண்ணிக்கையிலும் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது,'' என்றார்.