/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க 15 சுற்று பஸ்கள் இயக்கம்
/
சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க 15 சுற்று பஸ்கள் இயக்கம்
சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க 15 சுற்று பஸ்கள் இயக்கம்
சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க 15 சுற்று பஸ்கள் இயக்கம்
ADDED : அக் 01, 2025 11:43 PM

ஊட்டி; சுற்றுலா பயணியரின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில்,15 சுற்று பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறை, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி என, தொடர் விடு முறையை அடுத்து ஊட்டியில் சுற்றுலா பயணியரின் வருகை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில்'சர்கிள் பஸ்கள்' நேற்று முதல் இயக்கப்பட்டது.
இந்த பஸ்கள் படகு இல்லம், அரசு தாவரவியில் பூங்கா, ரோஜா பூங்கா , தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு ,100 ரூபாய் கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெகதீஷ்கூறுகையில், '' சுற்றுலா பயணியரின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று ( நேற்று ) முதல், 15 சுற்று பஸ்கள் இயக்கப்படுகிறது.
சுற்றுலா பயணியினர் வருகை அதிகரித்தால் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்,'' என்றார்.