/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிகரட்டி பள்ளியில் 169வது ஆண்டு விழா
/
அதிகரட்டி பள்ளியில் 169வது ஆண்டு விழா
ADDED : ஏப் 03, 2025 11:21 PM

குன்னுார்; குன்னுார் அருகே அதிகரட்டி துவக்க பள்ளியில், 169வது ஆண்டு விழா, விளையாட்டு தின விழா நடந்தது.
அதில், கூடுதல் தலைமை செயலர் (ஓய்வு) டாக்டர் சுந்தர் தேவன், அதிகரட்டி ஊர் தலைவர் பெல்லன், தொழிலதிபர்கள் கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வளர்மதி முன்னிலை வகித்தனர்.
வட்டார கல்வி அலுவலர் திருமூர்த்தி, குன்னுார் வட்டார பள்ளி கல்வி மேற்பார்வையாளர் காயத்திரி மற்றும் கொடலட்டி, பிக்கோல், கோடேரி கிராம தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் பல்வேறு அறிவியல் படைப்பு கண்காணி இடம் பெற்றன. அதனை கண்ட சிறப்பு விருந்தினர்கள் பாராட்டு தெரிவித்தனர். தலைமை ஆசிரியை சுமதி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் தர்மராஜ் நன்றி கூறினார்.

