/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விபத்துக்குள்ளான சுற்றுலா வாகனம்: உயிர் தப்பிய 21 சுற்றுலா பயணிகள்
/
விபத்துக்குள்ளான சுற்றுலா வாகனம்: உயிர் தப்பிய 21 சுற்றுலா பயணிகள்
விபத்துக்குள்ளான சுற்றுலா வாகனம்: உயிர் தப்பிய 21 சுற்றுலா பயணிகள்
விபத்துக்குள்ளான சுற்றுலா வாகனம்: உயிர் தப்பிய 21 சுற்றுலா பயணிகள்
ADDED : மார் 05, 2024 11:26 PM

கூடலுார்:கூடலுார் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், மினி சுற்றுலா வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், கர்நாடக சுற்றுலா பயணிகள், 21 பேர் உயிர் தப்பினர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த, 21 சுற்றுலா பயணிகள், இரு தினங்களுக்கு முன், ஊட்டிக்கு வந்து தங்கி சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்தனர். இவர்கள் நேற்று மினி சுற்றுலா பஸ் கர்நாடக செல்வதற்காக, கூடலுார் நோக்கி வந்தனர். பஸ்சை பெங்களூருவை சேர்ந்த மஞ்சுநாத், 32, என்பவர் ஓட்டி வந்தார்.
மதியம், 12:30 மணிக்கு ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, சில்வர் கிளவுட் அருகே, வளைவான பகுதியில், மினிபஸ் கட்டுப்பாட்டு இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சுற்றுலா பயணிகள், சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சுற்றுலா பயணிகள் மாற்று வாகனம் மூலம் பெங்களூரு சென்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'நடுவட்டம் - ஊசிமலை சாலை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, கீழ் நோக்கி வரும், வேகமாக வரும் சுற்றுலா வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது.
இதனை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

