ADDED : செப் 20, 2026 05:02 PM
பாலக்காடு: பாலக்காட்டில், 22.4 கிலோ கஞ்சாவுடன் மேற்குவங்க வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம், பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் கிரீஷ் தலைமை தானே ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் இன்ஸ்பெக்டர் பிரதாபன் தலைமையிலான போலீசார் இணைந்து சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில், இருந்த இருவரிடம் நடத்திய சோதனையில் ரூ.11.20 லட்சம் மதிப்புள்ள 22.4 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் மேற்கு வங்க மாநிலம் பர்தமான் பகுதியைச் சேர்ந்த சாஹிதுல் மல்லிக் 28, அசிம் சேக் 23, ஆகியோர் என்பதும், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவிலிருந்து கஞ்சாவைக் கொண்டு வந்து, மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டியில் உள்ள நபரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்தது தெரிந்தது.
கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
