/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ. 1.43 கோடியில் வீடு கட்ட 25 பழங்குடியினருக்கு ஆணை
/
ரூ. 1.43 கோடியில் வீடு கட்ட 25 பழங்குடியினருக்கு ஆணை
ரூ. 1.43 கோடியில் வீடு கட்ட 25 பழங்குடியினருக்கு ஆணை
ரூ. 1.43 கோடியில் வீடு கட்ட 25 பழங்குடியினருக்கு ஆணை
ADDED : ஜூன் 27, 2025 09:07 PM
ஊட்டி; மாவட்டத்தில், 25 பழங்குடியினருக்கு, 1.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்ட ஆணைகள் வழங்கப்பட்டது.
ஊட்டியில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
ஆணையக் குழு உறுப்பினர் ரேகா பிரியதர்ஷினி தலைமை வகித்தார். ஆணைய குழு உறுப்பினர்கள் செல்வகுமார், பொன்தோஸ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஆணையக் குழு உறுப்பினர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக, மாநில அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் செயல்படுத்துவ குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கக்குச்சி , உல்லத்தி ஊராட்சி பகுதிகளில் 1.43 கோடி ரூபாய் மதிப்பில், 25 பழங்குடியினர் வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டது.
பழங்குடியின கிராம மந்துகளில் சாலை வசதி அமைப்பதற்கான அனுமதி ஆணைகளும் வழங்கப்பட்டது. கூடுதல் கலெக்டர் கவுசிக் , எஸ்.பி. , நிஷா மற்றும் மாவட்ட வன அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

