/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் தேயிலை ஏலத்தில் ரூ.25.43 கோடி வருமானம்
/
குன்னுார் தேயிலை ஏலத்தில் ரூ.25.43 கோடி வருமானம்
ADDED : செப் 24, 2024 11:37 PM
குன்னுார் : குன்னுார் தேயிலை ஏலத்தில் சராசரி விலை 'கிடுகிடு'வென உயரும் நிலையில், 25.43 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
குன்னுார் ஏல மையத்தில், 38வது ஏலம் நடந்தது. அதில், '14.49 லட்சம் ரூபாய் இலைரகம்; 3.53 லட்சம் டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 18.02 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. அதில், '13.90 லட்சம் கிலோ இலை ரகம்; 3.44 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 17.34 லட்சம் கிலோ விற்றது. மொத்த வருமானம், 25.43 கோடி ரூபாய் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு, 146.63 ரூபாய் என இருந்தது. கிலோவுக்கு, 5 ரூபாய் சராசரி விலை உயர்ந்தது. கடந்த, 5 வாரங்களாக சராசரி விலை 'கிடுகிடு'வென உயர்ந்து, 45 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
கடந்த, 2022ம் ஆண்டு நடந்த, 38வது ஏலத்தில் வரத்து, 19.22 லட்சம் இருந்த நிலையில், 16.46 லட்சம் கிலோ விற்பனையாகி,16.43 கோடி ரூபாய்; 2023ம் ஆண்டு, நடந்த, 38வது ஏலத்தில் 21.58 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 19.29 லட்சம் கிலோ விற்பனையாகி, 17.63 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
வட மாநில உற்பத்தி பாதிப்பு காரணமாக, தென் மாநில தேயிலை துாளுக்கு கிராக்கி அதிகரித்து இதுவரை இல்லாத ஏற்றம் கண்டு வருகிறது.