/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவச கண் பரிசோதனை முகாம் குன்னுாரில் 270 பேருக்கு சிகிச்சை
/
இலவச கண் பரிசோதனை முகாம் குன்னுாரில் 270 பேருக்கு சிகிச்சை
இலவச கண் பரிசோதனை முகாம் குன்னுாரில் 270 பேருக்கு சிகிச்சை
இலவச கண் பரிசோதனை முகாம் குன்னுாரில் 270 பேருக்கு சிகிச்சை
ADDED : மார் 16, 2024 02:02 AM

குன்னுார்;குன்னுாரில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில், 270 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கதமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு, நீலகிரி மக்கள் நற்பணி மையம், திகழ் அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று குன்னுாரில் நடந்தது.முகாமில், நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு மாவட்ட இளைஞரணி செயலாளர் கோவர்தனன் ராமசாமி தலைமை வகித்தார் .
நீலகிரி மக்கள் நற்பணி மைய்யம் தலைவர் வினோத்குமார். பொதுச் செயலாளர் விஜயகாந்த், கவுரவ தலைவர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ., கனகராஜ் முன்னிலை வகித்தனர். அதில், 270 பேர் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
அதில், 32 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். 60 பேருக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
'ஐ பவுண்டேஷன்' மருத்துவமனை, கூடலுார் ஐலேண்ட் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்