/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டில் 31 பவுன் நகை திருட்டு?
/
வீட்டில் 31 பவுன் நகை திருட்டு?
ADDED : நவ 12, 2025 09:04 PM

குன்னுார்: குன்னுார் அருகே, வீட்டின் பீரோவில் வைத்திருந்த, 31 பவுன் நகை திருட்டு போன புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னுார் பழைய ஆஸ்பத்திரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், உமாராணி தம்பதி. இவர்கள் கடந்த மாதம், 27ல் அன்னுாரில் உள்ள உறவினர் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று, 29ல் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், 'நேற்று வீட்டில் உள்ள நகையை அடமானம் வைக்க, பீரோவில் பார்த்த போது, 31 பவுன் வரை நகைகள் காணவில்லை,' என, குன்னுார் போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில், டி.எஸ்.பி., ரவி தலைமையில், போலீசார் வீட்டில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், 'கதவுகள் உடைக்காமலும், பீரோவில் வெள்ளி உட்பட சில நகைகள் அருகில் இருந்துள்ள போதும், தங்க நகைகள் மட்டும் திருட்டு போனது குறித்தும், வீட்டில் வந்து சென்றவர்கள், அருகில் வீட்டு பணிகள் மேற்கொள்பவர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது,' என்றனர்.

