/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் கடும் குளிருடன் தொடர் மழை: மூன்று இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ADDED : நவ 12, 2025 09:09 PM

குன்னுார்: குன்னுாரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில், மூன்று இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. கடும் மேகமூட்டம் நிலவுவதுடன் கடுங்குளிரும் வாட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை குன்னுார் சின்ன வண்டிச்சோலை அருகே புதர்கள் சூழ்ந்திருந்த மரம் சாலையில் விழுந்தது. இதில் அருகில் இருந்த குடியிருப்புகளின் தடுப்பு சுவர் சேதமடைந்தது.
இதே போல, பெள்ளட்டிமட்டம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, 12 வது கொண்டை ஊசி வளைவு ஆகிய பகுதிகளிலும் மரங்கள் விழுந்தன. சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அகற்றினர்.