/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆரோக்கியபுரத்திற்கு 4 கரடிகள் 'விசிட்'
/
ஆரோக்கியபுரத்திற்கு 4 கரடிகள் 'விசிட்'
ADDED : அக் 26, 2025 08:52 PM
குன்னூர்: குன்னூர் கிடங்கு அருகே ஆரோக்கியபுரம் பகுதியில், குட்டிகளுடன் 4 கரடிகள் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் உணவு தேடி இரவில் மட்டுமே வந்த கரடிகள் தற்போது பகலிலும் உலா வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் ஆரோக்கிய புரம் பகுதியில், குட்டிகளுடன் 4 கரடிகள் தேயிலை தோட்டத்தில் உலா வந்தன.
அங்கு சிறிது நேரம் விளையாடின.
இப்பகுதி மக்கள் கூறுகையில், இரவில் மட்டும் வந்த கரடிகள் அருகில் உள்ள புதர்செடிகளில் தஞ்சமடைந்துள்ளதால் பகலிலும் தேயிலை தோட்டத்திற்கு வந்துள்ளது. அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்கள் வெளியே தனியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும், என்றனர்.

