/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
40 மூட்டை ஊட்டி பூண்டு மாயம்-: விசாரணை
/
40 மூட்டை ஊட்டி பூண்டு மாயம்-: விசாரணை
ADDED : செப் 09, 2025 09:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; ஊட்டி அருகே தோட்டத்தில் அறுவடை செய்து வைத்த, 40 மூட்டை பூண்டு மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி அருகே உள்ள தேனநாடுகம்பை அருகே குந்தசப்பை பகுதியை சேர்ந்த நவீனுக்கு சொந்தமான தோட்டத்தில் ஜெகதீஷ் என்பவர் விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக பூண்டு சாகுபடி செய்துள்ளார்.
அறுவடை செய்த பூண்டை தோட்டத்தில் மூட்டைகளாக அடுக்கி வைத்துள்ளார். அதில், 40க்கும் மேற்பட்ட மூட்டைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தேனநாடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விஜய சண்முகம், எஸ். ஐ., மகேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.