/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடன் திட்ட தள்ளுபடியில் 40 ஆயிரம் பேர் பயன்: கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் தகவல்

ADDED : நவ 18, 2025 02:36 AM

ஊட்டி: ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கூட்டுறவு துறை சார்பில், 72 வது கூட்டுறவு வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:
நீலகிரியில் கூட்டுறவு வார விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழை, எளிய சாமானிய மக்கள் எளிதில் நாடி தேவைகளை நிறைவேற்றி தரும் துறையாக கூட்டுறவு துறை செயல்பட்டு வருகிறது.
நீலகிரியில் விவசாய கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் மற்றும் நகை கடன் என, 319 கோடி ரூபாய் மதிப்பில் கடன் தள்ளுபடி செய்ததில், 40 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். மக்கள் நலன் கருதி இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்,'' என்றார்.
எம்.பி., ராஜா, தமிழக அரசு தலைமை கொறடா ராமசந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.