/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் விற்பனை மேளா
/
கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் விற்பனை மேளா
ADDED : நவ 17, 2025 01:18 AM

ஊட்டி: -நீலகிரி மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் ஒரு பகுதியாக, அனைத்து வட்டங்களிலும் வாகனங்கள் வாயிலாக, கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் விற்பனை மேளா நடந்தது.
ஊட்டியில் அமைந்துள்ள நீலகிரி கூட்டுறவு நிறுவன விற்பனை வாகனம் பொக்காபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், விற்பனையை மண்டல இணைப் பதிவாளர் சித்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதேபோல, நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வாகனம், குக்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும், கோத்தகிரி கூட்டுறவு பண்டகசாலை வாகனம், கோத்திமுக்கு சுற்றியுள்ள பகுதிகளிலும், தூதூர்மட்டம் கூட்டுறவு பண்டக சாலை வாகனம், மூப்பர் காடு சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், ஊட்டி கூட்டுறவு பண்டகசாலை, அதன் தலைமை இடத்திலும் விற்பனை மேளா நடந்தது.
ஊரக பகுதிகளில் கூட்டுறவு தயாரிப்புப் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் முக்கிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும், மக்கள் குறைந்த விலையில் கூட்டுறவு தயாரிப்பு பொருட்களை பெற்று பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் விற்பனை மேளா நடந்தது.
இதில், ஏராளமான பொதுமக்கள் கூட்டுறவு தயாரிப்பு பொருட்களை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், துணைப்பதிவாளர்கள் அஜித்குமார், கமல் சேட், நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் கவுரிசங்கர் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர் யோகேஸ்வரன், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

