/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அங்கக வேளாண்மை பட்டறிவு பயணம்; பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
/
அங்கக வேளாண்மை பட்டறிவு பயணம்; பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
அங்கக வேளாண்மை பட்டறிவு பயணம்; பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
அங்கக வேளாண்மை பட்டறிவு பயணம்; பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
ADDED : நவ 17, 2025 01:17 AM

கோத்தகிரி: தோட்டக்கலை- மலை பயிர்கள் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு அங்கக வேளாண்மை குறித்த பட்டறிவு பயணம் நடந்தது.
தூடை இயற்கை வேளா ண்மை மற்றும் சிக்மா இயற்கை வேளாண்மை பண்ணையில் நடந்த நிகழ்ச்சிக்கு, தோட்டக்கலை இயக்குனர் பரத்குமார் தலைமை வகித்தார்.
முன்னோடி விவசாயி சந்திரசேகர், நாற்றங்கால் பராமரிப்பு, அங்கக பண்ணையில் காய்கறி சாகுபடி, காய்கறி பயிரில் மதிப்பு கூட்டுதல், மற்றும் அங்கக இடுப்பொருட்கள் தயாரிப்பு முறைகள் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும், மேரக்காய் பயிரினை பதப்படுத்தி, பொடியாக மாற்றும் தொழில்நுட்பம் குறித்தும், செயல்முறை விளக்கம் அளித்தார். சிக்மா அங்கக பண்ணையின் நிறுவனர் குமரகுரு மாணிக்கவாசகம், அங்கக முறையில் கொய்யா, ஸ்ட்ராபெரி மற்றும் பிளாக்பெரி பழங்களின் சாகுபடி தொழில்நுட்பம் குறித்தும், பழ பயிர்களில் மதிப்பு கூட்டுதல் குறித்தும், மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த பட்டறிவு பயணத்தில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

