/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'வாசிப்பு பழக்கம் ஆளுமை தரும்' நுாலக வார விழாவில் அறிவுரை
/
'வாசிப்பு பழக்கம் ஆளுமை தரும்' நுாலக வார விழாவில் அறிவுரை
'வாசிப்பு பழக்கம் ஆளுமை தரும்' நுாலக வார விழாவில் அறிவுரை
'வாசிப்பு பழக்கம் ஆளுமை தரும்' நுாலக வார விழாவில் அறிவுரை
ADDED : நவ 17, 2025 01:12 AM

குன்னூர்: புத்தக வாசிப்பு பழக்கம் மிகப்பெரிய ஆளுமைகளை உருவாக்கும், என, தேசிய நூலக வார விழாவில், மாவட்ட நூலக அலுவலர் கிளமென்ட் பேசினார்.
குன்னூர் அருகே அருவங்காடு கிளை நூலகத்தில் புத்தக கண்காட்சியுடன், 58வது தேசிய நூலக வார விழா துவங்கியது.
குன்னூர் அருவங்காடு கிளை நூலகத்தில், 58வது தேசிய நூலக வார விழா நேற்று துவங்கியது. புத்தக கண்காட்சியை மாவட்ட நூலக அலுவலர் கிளமென்ட் துவக்கி வைத்து பேசுகையில், மாணவர்கள் சிறுவயதிலேயே தங்கள் வசிக்கும் பகுதியில் அருகில் இருக்கும் நூலகங்களில் உறுப்பினராகி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். புத்தக வாசிப்பு பழக்கம் மிகப்பெரிய ஆளுமைகளை உருவாக்கும், என்றார்.
நூலக உறுப்பினர் சேர்க்கை நடந்தது. வாசகர் வட்ட துணைத்தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் பொருளாளர், ஆனந்தன், நசருல்லா, டெம்ஸ் பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நூலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.