/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உபாசி குடியிருப்பில் நுழைந்த கரடி ;கதவை உடைத்து அட்டகாசம்
/
உபாசி குடியிருப்பில் நுழைந்த கரடி ;கதவை உடைத்து அட்டகாசம்
உபாசி குடியிருப்பில் நுழைந்த கரடி ;கதவை உடைத்து அட்டகாசம்
உபாசி குடியிருப்பில் நுழைந்த கரடி ;கதவை உடைத்து அட்டகாசம்
ADDED : நவ 17, 2025 01:11 AM

குன்னூர்: குன்னூர் உபாசி வளாகத்தில் புகுந்த கரடி, கதவுகளை உடைத்து சென்றது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகம் (உபாசி) மற்றும் குடியிருப்பு வளாக பகுதிக்கு, கடந்த 4 மாதங்களில், 13வது முறையாக நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் வந்த கரடி, 4 மணி வரை இதே பகுதிகளில் உலா வந்தது சி.சி டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது. உபாசி அலுவலரின் கார் ஷெட்டில் நுழைந்த கரடி அங்கு ஒன்றும் கிடைக்காமல் வெளியேறியது. பிறகு, உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய ஆலோசனை அலுவலர் முருகேசன் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றது. அவர் சப்தம் எழுப்பியதால் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இரவு நேரங்களில் அலுவலர்களின் குடும்பத்தினர் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாத நிலையில் அச்சத்தில் உள்ளனர்.
உபாசி அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த மாதம் 10வது முறையாக கரடி வந்த போது வனத் துறையினர் கூண்டு வைத் தனர்.
மீண்டும் வந்த போது, கூண்டிற்குள் செல்லாமல் அருகில் இருந்த கரையான்களை உட்கொண்டு சென்றது. தற்போது கதவுகளை உடைத்துள்ளது. கூண்டு வைத்து, பிடித்து வனத்தில் விட வேண்டும். 'என்றனர்.

