/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் நடைமுறை' உயிரியல் பூங்கா கால்நடை டாக்டர் விளக்கம்

ADDED : நவ 17, 2025 01:10 AM

கூடலூர்: -முதுமலையில் நடந்த பயிற்சி முகாமில், 'காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் நடைமுறை குறித்து உயிரியல் பூங்கா கால்நடை டாக்டர் விளக்கம் அளித்தார்.
முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள பயிற்சி மையத்தில், யானைகள் திட்டத்தின் கீழ், யானைகளுக்கான சிகிச்சை முறைகள், பராமரிப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு முதுமலை துணை இயக்குனர் கணேசன் தலைமை வகித்தார்.
வண்டலூர் உயிரியல் பூங்கா கால்நடை டாக்டர் ஸ்ரீதர், 'காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் நடைமுறைகள், ஊசி செலுத்திய பின், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முறைகள்' குறித்து விளக்கினார்.
ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவத்துறை கூடுதல் இயக்குனர் மனோ கரன், 'காட்டு யானைகள், வளர்ப்பு யானைகளின் குணநலன்கள், பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் வளர்ப்பு யானைகளுடன் பழகும் முறைகள்' குறித்து விளக்கினார்.
சீனியர் வன கால்நடை டாக்டர் கலைவாணன், 'யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள், யானைகளுக்கான பயிற்சி முறைகள்' குறித்து விளக்கினார். தொடர்ந்து யானை பாகன்களின வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், சமூக முன்னேற்றத்திற்காக எடுத்து வரும் முயற்சிகள் குறித்து வன அதிகாரிகள் விளக்கினார்கள்.
வளர்ப்பு யானைகளுக்கு கும்கி பயிற்சிகள் குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.
முகாமில், முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ் மற்றும் வன கால்நடை டாக்டர்கள், அரும்புகள் அறக்கட்டளை நிர்வாகி லதா மதிவாணன், யானை பாகன்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.