/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் 46 புதிய ஓட்டு சாவடி உருவானது; வரைவு ஓட்டு சாவடி பட்டியல் வெளியீடு

ADDED : செப் 28, 2025 10:00 PM
ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில், 46 ஓட்டு சாவடிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி , குன்னுார் , கூடலுார் ஆகிய மூன்று தொகுதிகளில், 690 ஓட்டுசாவடிகள் இருந்தது. 1,200 மற்றும் அதற்கு அதிகமான ஓட்டுக்களை கொண்ட ஓட்டுசாவடிகள் மறு சீரமைக்கப்பட்டது. அதன்படி, 49 புதிய ஓட்டு சாவடிகள் உருவானது. மேலும் வாக்காளர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ள மூன்று ஓட்டு சாவடிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டன. இறுதியாக, 46 ஓட்டு சாவடிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன. ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கை மாவட்டத்தில், 736 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், 'அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். கருத்துக்களின் அடிப்படையில் ஓட்டு சாவடி மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து , வரைவு ஓட்டு சாவடி பட்டியல் தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. கூட்டத்தில் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராதாகிருஷ்ணன் , வாக்காளர் பதிவு அலுவலர்கள் , உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தேசிய , மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட பல பங்கேற்றனர்.