/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் 4வது ஆண்டு புத்தக திருவிழா; இம்மாதம் 24ம் தேதி துவக்கம்
/
ஊட்டியில் 4வது ஆண்டு புத்தக திருவிழா; இம்மாதம் 24ம் தேதி துவக்கம்
ஊட்டியில் 4வது ஆண்டு புத்தக திருவிழா; இம்மாதம் 24ம் தேதி துவக்கம்
ஊட்டியில் 4வது ஆண்டு புத்தக திருவிழா; இம்மாதம் 24ம் தேதி துவக்கம்
ADDED : அக் 09, 2025 11:52 PM
ஊட்டி; ஊட்டி புத்தக திருவிழா இம்மாதம், 24ம் தேதி துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம், பொது நுாலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும், 4வது புத்தக திருவிழா, ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இம்மாதம், 24ம் தேதி முதல் நவ., 2ம் தேதி வரை காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது.
இந்த திருவிழாவில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பப்பாசி) வாயிலாக, 50 க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் புத்தக கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள சிறந்த பேச்சாளர்களும், மாவட்டத்தில் உள்ள கவிஞர்கள், பேச்சாளர்களும் பங்கேற்கின்றனர்.
புத்தக திருவிழா நடக்கும், 10 நாட்களும் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் திறமையை வெளிப்படுத்தும் விதமாக பட்டிமன்றம், நாடகம், கருத்தரங்கம் மற்றும் பல்துறை சார்ந்த கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது.
பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளும் இந்த திருவிழா வாய்ப்பினை பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.