/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பிளாஸ்டிக்' தடை குறித்த விழிப்புணர்வு; சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சப்பை

ADDED : அக் 09, 2025 11:51 PM

கூடலுார்; முதுமலை மசினகுடி சோதனை சாவடியில், சுற்றுலா பயணிகளிடம் இருந்து, பிளாஸ்டிக் பைகளை பெற்று கொண்டு, மஞ்சப்பைகளை வழங்கி, பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில், 21 வகையான பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் குடிநீர், குளிர்பான பாட்டில்களை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட எல்லையில் உள்ள, சோதனை சாவடிகளில், வருவாய் துறையின் சார்பில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, சுற்றுலா வாகனங்களை சோதனை செய்யப்படுகிறது. அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், முதுமலை, மசினகுடி வனச்சரகர் ராஜன் தலைமையில், வன ஊழியர்கள், மசினகுடி வனசோதனை சாவடியில், பிளாஸ்டிக் தடை குறித்து சுற்றுலா பயணிகளிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதில், சுற்றுலா பயணிகள் எடுத்து வந்த பிளாஸ்டிக் பைகளை பெற்றுக்கொண்டு, அதற்கு மாற்றாக மஞ்சப்பைகளை வழங்கினர்.
இதனை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.