/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புகையிலை இல்லா இளைய சமுதாய விழிப்புணர்வு பேரணி
/
புகையிலை இல்லா இளைய சமுதாய விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 09, 2025 11:50 PM

ஊட்டி; ஊட்டியில் புகையிலை இல்லா இளைய சமுதாயத்தை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
புகையிலை மற்றும் போதை வஸ்துக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் ரயில் நிலையத்தில் புகையிலை இல்லா இளைய சமுதாய விழிப்புணர்வு, 3.0 என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஆர்.டி.ஓ., டினு அரவிந்த் துவக்கி வைத்தார். இளைஞர்கள் 'போதை பொருள் பழக்கத்திலிருந்து விடுபடு வேண்டும், போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும்' என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த பேரணியில் மருத்துவர்கள், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செவிலியர்கள், கல்லுாரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர்.
பேரணி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நிறைவடைந்தது. அதில், இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.