/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
5. கி.மீ., துாரம் துாய்மை பணி 685 கிலோ பிளாஸ்டிக் சேகரிப்பு
/
5. கி.மீ., துாரம் துாய்மை பணி 685 கிலோ பிளாஸ்டிக் சேகரிப்பு
5. கி.மீ., துாரம் துாய்மை பணி 685 கிலோ பிளாஸ்டிக் சேகரிப்பு
5. கி.மீ., துாரம் துாய்மை பணி 685 கிலோ பிளாஸ்டிக் சேகரிப்பு
ADDED : டிச 20, 2025 08:51 AM
குன்னுார்: குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம், எம்.ஆர்.சி., புதுச்சேரி, என்.சி.சி., கிளீன் அமைப்பு சார்பில், 5 கி.மீ., துாய்மை பணி நடந்தது.
வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபா சாஹிப் லோட்டே, எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் ஆகியோர் அறிவுரையின் பேரில், வெலிங்டன் விக்டோரியா பாலம் முதல் வண்டிச்சோலை வரையிலான சாலைகள், வனப்பகுதிகளில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
அதில், பிளாஸ்டிக் கண்ணாடி மற்றும் பல்வேறு கழிவுகள் சாலையோரம், வடிகால்கள், வனப்பகுதிகள், நீர் வழித்தடங்களில் அதிகளவில் குவிந்திருந்தன. இவற்றில், 250 கிலோ பாட்டில்கள், 685 கிலோ பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் சேகரிக்கப்பட்டு, ஓட்டுபட்டறை குப்பை மேலாண்மை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
நிகழ்ச்சியில், வாரிய சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன்,சுகாதார ஆய்வாளர் பழனிசாமி, கிளீன் குன்னுார் அமைப்பு நிர்வாகிகள் சமந்தா அயனா, வசந்தன் மற்றும் வனத்துறையினர்,என்.சி.சி., பிரிவு மாணவ, மாணவிகள், பங்கேற்று துாய்மை பணிகளை மேற்கொண்டனர்.

